Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முல்லைவனநாதர்
  அம்மன்/தாயார்: கருகாத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை
  தல விருட்சம்: முல்லை
  தீர்த்தம்: பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்
  புராண பெயர்: கருகாவூர், திருக்களாவூர்
  ஊர்: திருக்கருகாவூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

அப்பர், திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்


மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் காய் சினத்த விடையார் கருகாவூரெம் ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 18வது தலம்.



 
     
 திருவிழா:
     
  *வைகாசி - வைகாசி விசாகம் - 10 நாட்கள் - பிரம்மோற்சவம் - கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா *புரட்டாசி - நவராத்திரி - அம்பாளுக்கு லட்சார்ச்சனை - 10 நாட்கள் திருவிழா *ஆடிபூரம் - பிரகாரம் வருவார் - 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். *இவை தவிர நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம் , கந்தர் சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். *மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். *வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  திருமணம்கூடிவர படிக்கு நெய் மெழுகுதல் : திருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.அவ்வாறு செய்பவர்களுக்கு திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன.தங்கள் பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி துலாபாரம் செய்கின்றனர். *குழந்தை பாக்கியம் பெற வைக்கும் நெய் : திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும்.கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும்.நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை.இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும். *சுகப்பிரசவம் அடைய வைக்கும் விளக்கெண்ணெய் : கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.இது விசேசமானதாகும்.இந்த விளக்கெண்ணெயை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும்.கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதரண வலி தோன்றினால் அப்போது மந்திரித்த விளக்கெண்ணெயை வயிற்றில் தடவினால் நின்று நிவாரணம் கிடைக்கும். இக்கோயிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதே, இக்கோயிலில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4374 – 273 502, 273 423, 97891 60819 
    
 பொது தகவல்:
     
 

*இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிவதலம்.


*கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில் இது.


 
     
 
பிரார்த்தனை
    
 

மகப்பேறு: திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும்,கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம்.


*மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் , கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர்.


*தீராத நோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள்.இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும்.


*இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


திருமணமாக, குழந்தை உண்டாக கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் கர்ப்பரட்சாம்பிகை படத்தின் முன்பு சொல்ல வேண்டும்:


ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம்
பதிம் மேகுருதே நம:


சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்:


ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட
அரதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்க வேண்டும்:


ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது.


 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரதி மாதம் வளர்பிறை மாலை பிரதோசத்தின் போது சுவாமிக்கு புனுகு சட்டம் சாத்துதல் முக்கிய நேர்த்திகடன் ஆகும். * தவிர (துலாபாரம்) எடைக்கு எடையாக பழங்கள், அரிசி, வெல்லம், கற்கண்டு, ரூபாய் ஆகியவற்றையும் பக்தர்கள் பெருமளவில் தருகிறார்கள். *அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. *மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். *சுவாமிக்கு கார்த்திகை சோம வாரம் குவளை சாத்தி 108 சங்காபிசேகம் நடைபெறும். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
    
 தலபெருமை:
     
 

*சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.


*முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத்திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப்படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லைக் கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.


*இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு, மிகச்சிறந்ததோர் ஆரோகியஸ்தலமாக இருந்து வந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூர்த்தியும், அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர்.


*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.


*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.


*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி. வக்கிர மூர்த்திகள் கிடையாது.


*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.


 
     
  தல வரலாறு:
     
 

ஒரு காலத்தில் இந்த இடம் முல்லை காடாக இருந்தது. நித்துருவர் வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கி குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர்.இதனையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்த போது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டார். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிச்சையிட முடியவில்லை.அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி குழந்தையாக கொடுத்தாள்.


இறைவியின் அருள் மகிமையைக் கண்டுணர்ந்த வேதிகை இத்தலத்தில் கர்ப்ப ரட்சாம்பிகையாகவே எழுந்தருளி உலகில் கருத்தருத்தவர்களையும் கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க அம்பாள் அவ்வாறே அருள் பாலித்தாள் என்று தலவரலாறு கூறுகிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar