Anjaneyar Temple : Anjaneyar Anjaneyar Temple Details | Anjaneyar - Alathiyur | Tamilnadu Temple | ஆஞ்சநேயர்
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> ஆஞ்சநேயர் > அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமர், ஆஞ்சநேயர்
  ஊர்: ஆலத்தியூர்
  மாவட்டம்: மலப்புரம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்திலும், ஆடி அமாவாசையிலும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல்10 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆலத்தியூர்- 676 102. மலப்புறம். கேரளா.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
 

விநாயகர், அய்யப்பன், துர்காபகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் தனி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.


 
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், இங்குள்ள கல்லில் கட்டிய திடலை தாண்டினால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாத்து ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை. அத்துடன் குழந்தைகள் இரவில் தூங்கும் முன் "ஆலத்தியூர் அனுமானே நிம்மதியாக தூங்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சீதையைத் தேடி புறப்பட்ட அனுமன் சாப்பிடுவதற்காக ராமர், அவல் கொடுத்து அனுப்பினார். இதன் நினைவாகத்தான் இன்றும் இத்தலத்தில் அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இப்படி அவல் நைவேத்தியம் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. என்று பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள் . 
    
 தலபெருமை:
     
 

ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அனுமன் தன்னலமில்லாத வீரனாக, ராம பக்தனாக திகழ்ந்தார். சீதாப்பிராட்டியை மீட்டு வருவதற்காக அவர் ராமரிடம் எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தார். தெய்வீக குணங்கள் அனைத்தும் அவரிடம் நிறைந்து இருந்தன. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர். இவரது பலத்தைப்பற்றி இவருக்கே தெரியாது.


அனுமான் தனது பலத்தைப்பற்றியோ, ராமருக்காக தான் செய்யும் தொண்டைப்பற்றியோ யாரிடமும் பெருமை பேசியது கிடையாது. நான் ராமபிரானின் சாதாரண தொண்டன் தான் என்று பணிவாகவே எப்போதும் கூறுவார். ராமருக்காக சேவை செய்யும் போது மரணமடைய நேரிட்டாலும் அதற்காக பெருமைப்படுவேன் என்று அடிக்கடி கூறுவார்.


ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனும் அவனது ராஜ்ஜியம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக முடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால் மிகப்பெரிய சாதனைகளை செய்த அனுமானோ ராமரிடம் எதுவுமே கேட்க வில்லை. சீதை தொடுத்த முத்துமாலையை கூட அனுமான் பரிசாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதையெல்லாம் பார்த்த ராமர், ""நீ எனக்கு செய்த உதவிக்கான நன்றிக்கடனை நான் எப்படி திரும்பச்செலுத்துவேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே எல்லோரும் உன்னையும் வணங்குவர். எங்கொல்லாம் எனது கோயில் இருக்கிறதோ, அந்தக்கோயிலில் எல்லாம் முதலில் உனது சிலை வைக்கப்பட்டு, முதலில் உன்னை வணங்கிய பின்னரே என்னை மக்கள் வணங்கட்டும்'' என்று அருளாசி செய்தார்.


இதையெல்லாம் கேட்ட அனுமான் மிகுந்த பணிவுடன், என் தலைவனே, எனது பெயரை யார் உச்சரித்தாலும், எனக்கென யாராவது கோயில் கட்டி என்னை வழிபட்டாலும் அவர்களுக்கும் தங்களே அனுக்கிரகம் புரிய வேண்டும். இதுவே நான் உங்களிடம் கேட்கும் வரமாகும் என்கிறார். ராமரும் அப்படியே ஆகட்டும் என்கிறார். இதனாலேயே "ராமா' என்று யார் சொன்னாலும் , ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலும் ஓடி அருள்பாலிக்கிறார் அனுமான். இறைவனிடம் பக்தி மட்டுமே செலுத்தி பிரதிபலன் பாராமல் இருந்தவர் அனுமன். இப்படிப்பட்ட அனுமனைப்பற்றி தெரிந்து கொண்டு, அவரை வழிபாடு செய்வது சிறப்பு.


ராமாயணத்தின் நாயகன் ராமனின் வலதுகையாக திகழ்ந்தவர்அனுமான். இவர் அமாவாசை தினத்தில் அவதரித்தார். எனவே இவரை ஆடி அமாவாசை தினத்தில் வழிபட்டால் பல மடங்கு புண்ணியம் நமக்கு கிடைக்கும். அனுமானை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. இவர் வாயுபகவானுக்கும், ஆஞ்சனாதேவிக்கும் பிறந்தவர். இவருக்கு பவனசுதன், பவனகுமார், மகாவீரர், மருத்சுதன், ஆஞ்சநேயன், பஜ்ரங்கபலி என்ற பெயர்களும் உண்டு.


 
     
  தல வரலாறு:
     
 

கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் முலஸ்தானத்தில் ராமபிரான் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.


சீதையை தேடிப்போகும் தனது உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுத்து, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான், மூலஸ்தானத்தில் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். ராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சீதையை கண்டுபிடித்துவர ராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால ரகசியம் சொல்லும் போது,அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் மாறி நிற்பான். அந்த இடத்தில் லட்சுமணனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதிப்பகுதியாகிய இந்தப்பிரதிஷ்டையின் சந்தர்ப்பத்தால் தான் அனுமானுக்கு அதிக சக்தி கிடைத்திருக்கிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.