Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர் (இத்தலத்தில் அம்மனே பிரதானமாக வழிபாடு செய்யப்படுகிறது)
  அம்மன்/தாயார்: துர்க்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி
  தீர்த்தம்: பாப விமோசன தீர்த்தம்
  புராண பெயர்: தேவி தபோவனம்
  ஊர்: அம்மங்குடி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, நவராத்திரி, எட்டாம் நாள் வளர்பிறை அஷ்டமி (துர்கா அஷ்டமி) மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-435- 246 7167, 94430 46255, 94439 32983 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது. இங்கு பார்வதி, துர்கை, வள்ளி தெய்வானையுடன் முருகன், தபஸ் மரகத விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், யோக சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள இறைவனையும், கல்வியில் சிறந்து விளங்க யோகசரஸ்வதியையும் பிரார்த்திக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.

துர்கா பரமேஸ்வரி எட்டு கரங்களுடன், சிம்மவாகனத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள். எதிரியை அழிப்பதே உன்னுடைய அமைதியான வாழ்க்கைக்காகத்தான் என்று பக்தர்களுக்கு அறிவிப்பது போல முகத்தில் சாந்தம் நிறைந்த புன்னகை தவழ்கிறது. அம்பாளின் கைகளில் சூலாயுதம், சங்கு, சக்கரம், கேடயம், வில், கத்தி, அம்பு, மகிஷாசுரன் தலை ஆகியவை உள்ளன.இவ்வூருக்கு கேரளாந்தக சதுர்வேதமங்கலம், நாராயணபுரம் என்ற பெயர்களும் இருந்தன. ஸ்காந்த புராண சேத்திரகாண்டம், 66வது அத்தியாயத்தில் சூதபுராணிகர், அம்மங்குடி கைலாசநாதர் குறித்து கூறியுள்ளார். துர்காஷ்டமி அன்று துர்கா தேவி வீதி உலா சென்று மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. சூரியன், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகளும் உள்ளன.

அதிசய விநாயகர்:
இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான வழிபாடு: கல்விக் கடவுளான சரஸ்வதி வீணையுடன் அருள்பாலிப்பது வழக்கம். இங்குள்ள யோக சரஸ்வதி வீணையின்றி யோக நிலையில் இருக்கிறாள். இவளை வழிபட்டால் மனம் ஒருமுகப்படும். இதன் மூலம் கல்வியில் மேன்மை உண்டாகும். இவ்வாண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உள்ளவர்கள், இந்த சரஸ்வதியை வழிபட்டு வந்தால், அவர்களுக்கு படிப்பில் கவனமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும். இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் தண்டை என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

கிழமைக்கு ஒரு பலன்: செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வஅபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம்.
 
     
  தல வரலாறு:
     
  மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், அன்னை துர்க்கைக்கு தோஷம் ஏற்பட்டது. இதனைப் போக்க, அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். பூலோகத்திலுள்ள  தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஸ்தாபித்து தியானம் செய்தாள். 12 ஆண்டுகள் தவம் தொடர்ந்தது. தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் அம்பாள் முன்தோன்றி, உன்தோஷம் நீங்கி விட்டது. இத்தலத்திலேயே தங்கி, உன்னை தரிசிப்பவர்களின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் வேண்டும் செயல்களுக்கு வெற்றியை அருள்வாயாக, என்று வரமளித்தார். தேவி தவம் செய்த இடம் தேவி தபோவனம் எனப்பட்டது. இங்குள்ள தீர்த்தம் அம்மனின் பாவத்தைப் போக்கியதால் பாவ விமோசன தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அம்மன் குடியிருக்க தேர்ந்தெடுத்த இடம் என்ற பொருளில் அம்மன்குடி என்றாகி, பேச்சு வழக்கில் அம்மங்குடி ஆகி விட்டது.

முதலாம் ராஜராஜசோழ மன்னனின் படைத்தலைவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் இவ்வூரில் பிறந்தவர். இவரே தங்கள் ஊரில் தங்கிய அம்பாளுக்கு கோயில் கட்டினார். ராஜராஜேஸ்வரியான துர்கா தேவி தங்கியதால் இவ்வூருக்கு, ராஜராஜேஸ்வரம் என்று பெயர் வைத்தார். மன்னர் ராஜராஜ சோழனின் மீது அன்பு கொண்டவர் என்பதால், அவரது பெயரை வைத்ததாகவும் கூறுவர். அம்பாளுக்கு துர்கா பரமேஸ்வரி என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாள் பூஜித்த லிங்கமும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு கைலாசநாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar