Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நம்புநாயகி அம்மன்
  ஊர்: தனுஷ்கோடி
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  நவராத்திரியின் போது 9 நாட்களும் நம்புநாயகி அம்மன் நவசக்திகளின் வடிவமாக கொலுவில் இருந்து 9 வது நாளில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை இல்லாதவர்களும், திருமணம் தள்ளிப்போகும் கன்னிகளும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளி கிழமைகளில் நம்புநாயகியை வழிபட்டால் விரைவில் பிரார்த்தனை பலிக்கும்.

தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். கோயில் பூஜாரி தரும் அம்மனுக்கு சாத்திய மஞ்சள் காப்பு பிரசாதத்தை உண்டு குணமடைந்து செல்லும் அதிசயமும் உண்டு.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.  
     
  தல வரலாறு:
     
  இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்ததாகவும். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தக்ஷ்ணா காளியாக பெயர் பெற்றதாகவும், அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

ராமேஸ்வரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான். அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் தெக்ஷணா காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். உடன் இருந்த சகோதரர்கள், அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் தக்ஷ்ண காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன் காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நன்னீர் தடாகங்களில் நீராடி காளியை வணங்கிவர முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தான். நம்பி வந்து வணங்கியதால் துயர்துடைத்த தெக்ஷணா காளி அம்மனுக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்த சூலோதரன் தன்னைப்போல் தீராத பிணிகளுடன் வரும் பக்தர்கள் தங்கி நலமடைந்து செல்ல பல வசதிகளையும் செய்து கொடுத்தான். காளியை கேலி செய்தவர்கள் பெரும் நோய்க்கு ஆளானார்கள். எனவே ""நம்பு நாயகியை வணங்கினால் வம்பில்லை,'' என்ற சொலவடை உருவாயிற்று. பின்னாளில் பல்வேறு காலகட்டத்தில் தற்போது உள்ள பழமையான கோயில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மராட்டிய பிராமணர்களின் குலதெய்வமாக விளங்கும் நம்புநாயகியின் திருப்பெயரை இந்த பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். ""குழந்தை வரம் வேண்டுமென்று நம்பியே கும்பிட்டேன் நாயகியை, பூ கொடுத்தால் வாடுமென்று எனக்கு நம்பு நாயகியாள், மைந்தன் தந்தாள் அவள் பேரு சொல்ல'' என்று பெண்கள் பாடுகின்ற தாலாட்டு பாட்டு வரிகள் கேட்டு தூங்கும் மழலைகள் ஏராளம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar