Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பெரிய மாரியம்மன்
  தல விருட்சம்: வேப்பமரம்
  ஊர்: பிரப் ரோடு
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனி தேர்த்திருவிழாவாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை விழா ஆரம்பித்து அன்று இரவு பூச்சாட்டுதல் நடைபெறும். பின் அதை தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, கரகம் எடுத்தல், பொங்கல், தேரோட்டம் இறுதியாக கம்பத்தை எடுத்து காரை வாய்க்காலில் விடுதல் முதலிய நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு- 638001, ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91-424-2258670 
    
 பொது தகவல்:
     
 

இக்கோயிலின் தேரில் சிவபெருமான், முருகன் திருவிளையாடல்களை காணலாம். தேரின் நான்கு முனைகளிலும் அழகிய நான்கு யானைகள் தாங்குவதை போல் சிற்பங்கள் இருக்கிறது.



 
     
 
பிரார்த்தனை
    
  வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், தூரியும் அழகுற விளங்குகிறது. வேப்பமரத்தை தலவிருட்சமாக கொண்டது இக்கோயில். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 7.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.

பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் கோயில், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது. பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். ஜாதி, மதம், இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற விழாவாகும்.

மக்கள் குழுக்களாக கூடி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

மூன்று கோயில்களிலும் உள்ள கம்பங்களை எடுத்து வாய்க்காலில் விடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கம்பங்களுக்கு மஞ்சள் நீர் வார்த்து பயபக்தியுடன் வழிபாடு செய்வர். மக்கள் ஒருவர்மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வது வடநாட்டு ஹோலி பண்டிகையை நினைவூட்டும்.
 
     
  தல வரலாறு:
     
 

இக்கோயில் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar