Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர்
  அம்மன்/தாயார்: ஞானம்பிகை
  தல விருட்சம்: ஆலமரம்( தற்போதில்லை), வில்வம்
  தீர்த்தம்: காவிரி
  புராண பெயர்: ஆலம்பொழில்
  ஊர்: திருவாலம் பொழில்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருநாவுக்கரசர்



தேவாரபதிகம்



பொல்லாத என்அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை எல்லாரும் தன்னையே இகழ அந்நாள் இடுபலி என்று அகம்திரியும் எம்பிரானைச் சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணுவாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.



-திருநாவுக்கரசர்



 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 10வது தலம்.



 
     
 திருவிழா:
     
  ஆவணி மூலம், சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்  
     
 தல சிறப்பு:
     
  இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அஷ்டவசுக்கள் பூஜித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 73 வது தேவாரத்தலம் ஆகும். சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில், திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி - 613 103. வழி - திருக்கண்டியூர். திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 4365 - 284 573, 322 290 
    
 பொது தகவல்:
     
 

கோயில் பிரகாரத்தில்மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் உள்ளனர்.


 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புதுவஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது.


கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகள் உள்ளது.


இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது.


இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


 
     
  தல வரலாறு:
     
 

இத்தலக் கல்வெட்டு இறைவனை ""தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்' என்று குறிக்கிறது.


அப்பரும் தம்  திருத்தாண்டகத்தில் ""தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே' என்று பாடியுள்ளார்.


இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar