அன்னை மீனாட்சி முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்



மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று (மார்ச் 27) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. பங்குனித் திருவிழாவின் மூக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (மார்ச். 28) நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையிடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வந்து, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பகல் 12.30 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாணம்,  அன்னை மீனாட்சி முன்னிலையில் வேத மந்திரம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து மாற்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 28) திருக்கல்யானம், நாளை (மார்ச் 29) தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை, திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்நாட்களில் போக்குவரத்தில் மதுரை போலீசார் மாற்றம் செய்துள்ளனர். திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலை வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும். மதுரையிலிருந்துவரும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்வதற்கு எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் மூட்டா தோட்டத்திலிருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக திருநகர் செல்ல வேண்டும். திருநகரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள்அனைத்தும் பூங்கா பஸ்நிறுத்தம் அருகே காலி இடத்திலும், திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்திலுள்ள கட்டண வாகன திறுத்தத்திலும் நிறுத்த வேண்டும். மதுரையிலிருந்து கோயிக்குவரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒக்கலிக்கர் மண்டபம் அருகிலுள்ள தெப்பக்களம் கட்டண வாகன திறுத்தத்திலும், டூவீலர்கள் திருப்பரங்குன்றம் ஆர்ச்முதல் மயில் மண்டபம்வரை சாலையின் இருபுறமும் நிறுத்த வேண்டும். மயில் மண்டபத்திலிருந்து மூன்று ரத வீதிகளிலும் எந்த வாகனங்களும் நிறந்து அனுமதி கிடையாது. அனியாபுரத்திலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் சரவணப் பொய்கை நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். அவனியாபுரத்தில் இருந்துதிருப்பரங்குன்றம் சாலை வழியாக நிலையூர், திருநகர் செல்லக்கூடிய இலகு ரக வாகனங்கள் கே.வி. பள்ளியின் வலது புறம் திரும்பி தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலை வழியாக ஜி.எஸ்.டி. ரோடு செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அவனியாபுரம் முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வரும் அனைத்து அரசு வாகனங்களும் அருணகிரி திருமண மண்டம் வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். மதுரையில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் டூவீலர்கள் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நிறுத்த வேண்டும். ஹார்விபட்டி, நிலையூரில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் அனைத்து வாகனங்களும் நிலையூர் சந்திப்பு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டுபவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மதுரை போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்