திருப்பதி வசந்தோத்ஸவம் நிறைவு; பக்தர்கள் பரவசம்



திருப்பதி;  ஸ்ரீவாரி சலகட்லா வசந்தோத்ஸவம் கோலாகலமாக நிறைவடைந்தது.

திருமலை ஸ்ரீவாரி கோயிலின் பின்புறம் உள்ள வசந்தோத்ஸவ மண்டபத்தில் கடந்த 3 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த சலகட்லா வசந்தோத்ஸவம் இன்று நிறைவடைந்தது. முதல் நாள், இரண்டாம் நாள் ஸ்ரீ மலையப்பசுவாமி வசந்தோத்ஸவத்திலும், கடைசி நாளில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமியும் வசந்தோத்ஸவ சேவையில் பங்கேற்றனர். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமி, உற்சவர்களுக்கு ஸ்னபன திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அனைத்து சுவாமிகளையும் ஒரே மேடையில் தரிசனம் செய்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெத்தஜீயர்சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜியர்சுவாமி, தாளாளர் ஸ்ரீ ஏ.வி.தர்ம ரெட்டி, அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்