உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி சுவாமிக்கு பால், தயிர், நெய், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்ன சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பூஜையும், தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதேபோல் எலவானசூர்கோட்டை ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.