தேர்தலில் தவறாது ஜனநாயக கடமையாற்றிய சத்குரு



தொண்டாமுத்தூர்; முட்டத்து வயலில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி ஓட்டுச்சாவடியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடந்தது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்பதிவு செய்து சென்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி ஓட்டுசாவடிக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, காலை, 8:09 மணிக்கு வந்தார். 8:15 மணிக்கு, தனது ஓட்டை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே வரும்போது, ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை தொட்டு அழைத்து, அனைத்து இளைஞர்களும் கட்டாயம் ஓட்டு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்த மக்களுடன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார். அதன்பின், ஈஷாவில் உள்ள பிரம்மச்சாரிகள், பொதுமக்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்