புதுடில்லி ஸ்ரீதேவி காமாட்சி கோவிலில் நவ சண்டி ஹோமம்



புதுடில்லி,  வசந்த நவராத்திரியை ஒட்டி, புதுடில்லி அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி காமாட்சி கோவிலில் நேற்று முன்தினம், நவசண்டி ஹோமம் நடத்தப்பட்டது. வசந்த நவராத்திரி நிறைவு நாளான நேற்று முன்தினம் ஸ்ரீராமநவமி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுடில்லி அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி காமாட்சி அம்மன் கோவிலில், நவசண்டி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை, கணபதி பூஜையு டன் தொடங்கிய நிகழ்ச்சி யில் ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணம், மஹன்யாஸ பாராயண ஜபம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் நடை பெற்றது. ரிக் வேதிகள் பங்கேற்று ஜபம் செய்தனர். புண்யாஹவசனம், சங்கல்பம், கலச பூஜை, ஆவாஹனம், சண்டி பாராயணம், ஜபம், ஹோமம், பூர்ணாஹுதி, வசோர்தரா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி காமாட்சிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்