கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்



பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி முதல் நாள் மகா கணபதி யாகம், மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் சுப்ரபாதம், பாகவதம், ஸ்ரீரங்க மகாத்மியம் பாராயணம், மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோபுர கலசம் இயந்திர ஸ்தாபனம், மூலவர் சுவாமிகள் மற்றும் பரிவார சுவாமிகள் பிரதிஷ்டை செய்து, திருமேனிகளை பீடத்தில் வைத்து, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள், 108 திவ்ய தேச பெருமாள் எழுந்தருள செய்தல், நான்காம் கால யாக பூஜை, கலசம் ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணிக்கு திருக்கோயில் விமானம் மற்றும் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள், பரிவார சுவாமிகள் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, தச தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு அச்சம் பாளையம் சண்முகம் குழுவினரின் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடந்தது. அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்