அலங்கோலத்தில் அதிசய சங்கு தோன்றிய சங்கு தீர்த்த குளம்!



திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக்குளத்தில், இந்தஆண்டு சங்கு தோன்றிய சூழலிலும், பராமரிப்பின்றி, குப்பை கழிவுகள் சூழ்ந்து அலங்கோலமாக காணப்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. அதன் புனித தீர்த்தம் சங்கு தீர்த்தகுளம். இதில், கடந்த மார்ச் 7ம் தேதி, புனித சங்கு தோன்றியது. ஒரு வாரத்திற்கும் மேல், பக்தர்கள் திரண்டு தரிசித்தனர். இது ஒருபுறமிருக்க, கடந்த ஏப்., 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, சித்திரை
பெ ருவிழா நட ந்தது. வெள்ளி அதிகார நந்தியில் வேதகிரீஸ்வரர், பிறசுவாமியர், 63 நாயன்மார் கிரிவலம், பஞ்சமூர்த்தியர் திருத்தேர்களில் உலா ஆகிய முக்கிய உற்சவ நாட்களில், பக்தர்கள் திரண்டனர். சங்குதீர்த்தகுளத்தில் அக்கறையின்றி, காலி குடிநீர் பாட்டில்கள், பிரசாத தாள்கள் உள்ளிட்ட குப்பையை பக்தர்கள் குவித்து சென்றுள்ளனர். பிற குப்பையும் குளத்தில் வீசப்படுகிறது. குளக்கரை பகுதியினர், துணி துவைத்து மாசுபடுத்துவதும் தொடர்கிறது. சங்கு தோன்றிய சூழலில், அதன் புனிதம் உணராமல், குளத்தை அசுத்தப்படுத்தி அலங்கோலமாக காணப்படுகிறது. கோவில் நிர்வாகம், இக்குளத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்றி, துாய்மையுடன் பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்