கல்லை தெப்பமாக்கி அப்பர் குளத்தில் கரையேறும் நிகழ்ச்சி; பக்தர்கள் பரவசம்



கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் நிகழ்ச்சி நடந்தது.

சைவ குறவர்களின் ஒருவரான  அப்பர் என்கிற திருநாவுக்கரசர் சைவ சமயத்தின் சிறப்புகளை பாடி வந்தார். அதனை அறிந்த சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ  மன்னன் உத்தரவின் பேரில் திருநாவுக்கரசர் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போது திருவாவுக்கரசர் ‘சொற்றுணை வேதியன்’ எனத் தொடங்கும் நமச்சிவாய பதிகத்தை ஓதியபடி கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலூர், வண்டிப்பாளையத்தில் கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில்  எழுந்தருளிவரும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை வழிபட்டார். இந்த வரலாற்று பெருவிழா ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாத அனுஷ  நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற விழாவில், புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதையடுத்து புதுவண்டிப்பாளையம் வீதி, அப்பர் சாலை, பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் வீதி வழியாக உலா வந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்