மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வேலுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். இந்த முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடக்கிறது. இதற்காக வேல், கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் பவானி ஆற்று அருகே உள்ள சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு வேல் கொண்டுவரப்பட்டது. இந்து முன்னணி கோவை கோட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில், வேல் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு, தீபாரதனை காட்டி வழிபட்டனர்.