பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை



பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வரும் வழியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.


பழநி கோயிலுக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திண்டுக்கல் மாவட்டம் வழியாக பழநியை வந்தடைவர். கார்த்திகை மாதம் முதல் மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தகுந்த வசதிகள் வரும் வழியில் இல்லை என பக்தர்கள் கூறி வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு என அமைக்கப்பட்ட தனிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது. மேலும் அப்பாதையில் திறந்தவெளி கழிப்பிடமாக சிலர் பயன்படுத்தி வருவதால் அசுத்தமாக உள்ளது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பாதையை தவிர்த்து வாகனங்கள் வரும் சாலையில் பக்தர்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை இருப்பு இல்லாத காரணத்தால் பஸ் மற்றும் லாரிகள் அதிக வேகத்தில் சாலைகள் செல்கின்றன. நெடுந்தூரம் நடந்து வரும் பக்தர்கள் உடனடியாக விலக முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் விபத்து அபாயம் உருவாகிறது.


சாலைகளில் சில இடங்கள் பெயர்ந்து கற்களோடு இருப்பதால் பாதயாத்திரை வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றன. முக்கிய இடங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஒளிரும் பட்டைகள், குச்சிகளை அணிந்து வர பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இரவு நேர பாதயாத்திரை தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும் தகுந்த வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் நாட்களின் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பை உறுதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது குறித்து திருக்குமரன், அழகர் கோயில், பாதயாத்திரை பத்தர், கூறுகையில், "கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து மூன்று நாட்களாக பாதயாத்திரையாக பழநி வந்து உள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக பாதயாத்திரை வருகிறேன். இந்த ஆண்டு எங்கள் ஊரிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் குழுவாக வருகை புரிந்துள்ளோம். ஒட்டன்சத்திரத்தை கடந்து கணக்கம்பட்டி அருகே வரும்போது பாதயாத்திரை பாதையில் பகுதியில் முட்புதர்கள் அதிகம் உள்ளது. இதனால் சாலையில் நடக்கும் சூழல் ஏற்படுகிறது. வாகனங்கள் அதிக வேகத்துடன் வருகின்றன. இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. சில இடங்களில் கழிப்பறை, குளிக்கும் வசதிகள் முறையாக இல்லை. இரவு 10 மணி வரை நடக்கும் சூழல் சில இடங்களில், மின்விளக்கு வசதி இல்லாததால் இல்லை. இதனை சரி செய்ய வேண்டும்."என்றார்.


மார்கழி ஸ்பெஷல் 10; திருமண வரம் தரும் வராகப்பெருமாள்!

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருவெம்பாவை பாடல் 11

மேலும்