வால்பாறை; கருமலை எஸ்டேட் முனீஸ்வரன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட். இங்கு முனீஸ்வரன் கோவில், 40ம் ஆண்டு திருவிழா, கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், சுவாமிக்கு நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவில், நேற்று காலை பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மாலை, 5:00 மணிக்கு தெப்பக்குளம் சென்று, சக்தி கரகம் கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் முருகன், மயில்வாகனம், தங்கமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.