காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.எம். ரவி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் வந்த கவர்னருக்கு தேவஸ்தான துணை செயல் அலுவலர் என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு, சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தார். கோயிலுக்குள் சென்ற கவர்னர் காளஹஸ்தீஸ்வரரையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி திருவுருவப் படத்தையும் கோவில் நிர்வாகத்தினர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் நாகபூஷணம் யாதவ், பி.ஆர்.ஓ. ரவி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.