ஸ்ரீரங்கத்தில் மார்கழி 15ம் நாள் வழிபாடு; வல்லானை கொன்றான் கோலத்தில் சுவாமி அருள்பாலிப்பு

டிசம்பர் 30,2024



ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் பதிமூன்றாம் நாளான இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் வல்லானை கொன்றான் திருக்கோலத்தில், எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,  உற்சவர் அருள்பாலித்தனர். ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.


மார்கழி ஸ்பெஷல் 20; வரம் தருவார் நெற்குன்றம் கரிவரதராஜர்

மேலும்

திருப்பாவை பாடல் 20

மேலும்

திருவெம்பாவை பாடல் 20

மேலும்