கோவில்களில் சூரிய பொங்கல் வழிபாடு; சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை



விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் சூரியப் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள சூரிய மூர்த்தி சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், வேடப்பர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், எருமனுார் ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மங்கலம்பேட்டை பாப்பான்குளம் தெருவில் உள்ள சுயம்பு வேப்பிலைக்காரி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், சுவாமிக்கு பட்டாடை உடுத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் புத்தாடை அணிந்து சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்