மத நல்லிணக்க பொங்கல் விழா; ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடினர்



மேலூர்; தும்பைபட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீரகாளியம்மன் கோயிலில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து மத நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.


மாட்டு பொங்கலை முன்னிட்டு புதிய ஜவுளிகள் வாங்க கிராமத்து சார்பில் பணம் வசூலிக்கப்பட்டு இஸ்லாமிய இனத்தை சேர்ந்த தரகன் வகையறவிடம் ஒப்படைக்கப்பட்டு ஜவுளிகள் வாங்கப்பட்டது. இவ்வாறு புதிதாக வாங்கப்பட்ட ஜவுளிகள் கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தை திடலில் வைக்கப்பட்டு அனைவரும் சாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து தரகன் வகையாக சேர்ந்தவர் மற்றும் கிராமத்தினர் புதிய ஜவுளிகளை சுமந்து வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு புதிய ஜவுளிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் நடந்தது. பிறகு கோயில் மாட்டுக்கு அணிவிக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடந்தது அதற்கு முன்பாக மத நல்லிணக்க பொங்கல் வைக்கப்பட்டு கோயிலில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் சுவாமி கும்பிட்டனர். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆண்டுதோறும் மத நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடுவதாக கிராமத்தார்கள் தெரிவித்தனர். இவ்விழாவில் தும்பை பட்டி கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்