குடந்தை மடத்தில் பிறந்த கன்றுக்குட்டிக்கு துர்கா என பெயர் சூட்டி தொட்டிலில் வைத்து தாலாட்டு



தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், காவிரிக்கரையோரம் சோலையப்பன் தெரு விஜயீந்த்ர தீர்த்தர் சுவாமிகள் மூல பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  இவர் கி.பி. 1614ம் ஆண்டில், 17ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். ஆயகலைகள் அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்து, 108 கிரந்தங்கள் எழுதியவர். இந்த விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடம், ஸ்ரீமந்திராலயம் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல் பட்டுவருகிறது.


இந்நிலையில் இன்று மாட்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீமந்திராலய மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசுபுதேந்திர தீர்த்தரின் ஆணையின்படி, விஜயீந்த்ர தீர்த்தர் சுவாமிகள் மூல பிருந்தாவனத்தில் உள்ள காமதேனு கோசாலையில் 10 நாட்டு பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. இந்த கோசாலையில் உள்ள "உம்பளச்சேரி நாட்டு மாடு" புதிதாக ஈன்ற பசுக்கன்றுக்கு "துர்கா" என பெயரிட்டு, தொட்டிலில் வைத்து தாலாட்டும் வைபவமும், மும்மாரி மழை பெய்து நாடு செழிக்கவேண்டும், உலக நாடுகள் அமைதியாக, ஒன்றுமையுடன் வளரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடினர். ஏற்பாடுகளை மடத்து மேலாளர் நரசிம்மன், மாதவன் மற்றும் விஷ்ணுபாலாஜி, மடத்தின் பணியாளர்கள் செய்திருந்தனர். இது குறித்து மடத்தின் மேலாளர் விஷ்ணுபாலாஜி கூறியதாவது: கோசாலையில் 10 நாட்டு பசுக்கள் உள்ளது. இதில், உம்பளச்சேரி பசுவும் ஒன்று. இந்த பசுவானது இதுவரை காளை கன்றுக்குட்டிகளை ஈன்று வந்தது. முதல்முறையாக பெண் கன்று ஈன்றுள்ளதால், துர்கா என பெயர்சூட்டியுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்