பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம்



பழநி; பழநி கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீ பர்வத ராஜகுல காவடி குழுவினர் இரவில் தங்கி சுவாமி தரிசனம்..


பழநி கோயிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூசம் நிறைவடைந்த உடன் சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பர்வத ராஜகுல மக்கள், இளநீர் காவடி, மயில் காவடி, பால் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்து அடைவார். இவர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இன்று காவடிகளை மானூர் சண்முக நதிக்கு கொண்டு வந்தனர். அங்கு பூஜைகள் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காவடிகளுக்கு வழிபாடு நடைபெற்ற பின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். அதன் பின் பழநி கோயிலுக்கு சென்று அங்கு காவடிகளை செலுத்தி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதன் பின் இரவு வெளிப்பிரகாரத்தில் பர்வத ராஜகுல மக்கள் தங்கி இருந்தனர். நாளை அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்