குஜராத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை தொடங்கியது இந்திய தொல்லியல் ஆய்வகம்.
கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்று போனார். 17வது முறை சண்டையிட்டபோது மதுரா நகரிலிருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது கிருஷ்ணர் சௌராஷ்டிரா தேசம், ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார். ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். அதனால் பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துகிக்கிறார்கள்.
கம்சனைக் கொன்ற பிறகு மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார் கிருஷ்ணன். இது, கம்சனுடைய மாமனாரும்- மகத தேசத்து அரசனுமான ஜராசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மதுராமீது போர் தொடுத்தான். ஜராசந்தனுடைய சேனையை எதிர்த்து நிற்க முடியாமல் சேனை பின்வாங்கியது. இதனிடையே, தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர், மீதமிருந்த சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வந்து, சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார். அதன்படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து, மக்களையும், மாடு- கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் கிருஷ்ணர்.
இப்படித் தோன்றியதுதான் துவாரகா. கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. அதை கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். தற்போது குஜராத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை இந்திய தொல்லியல் ஆய்வகம் தொடங்கியுள்ளது. 5 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு ஆழ்கடலில் இறங்கி தொல்பொருள் தடயங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.