யமுனா ஆரத்தி; டில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்று தரிசனம்



டில்லி;டில்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளில், ரேகா குப்தா, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் டில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோருடன், யமுனை நதிக்கரையில் உள்ள வாசுதேவ் காட்டில் மாலை ஆரத்தியில் கலந்து கொண்டார்.


ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட குப்தா, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டில்லியின் ஒன்பதாவது முதலமைச்சராக நேற்று காலை பதவியேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். யமுனை நதி மாசுபாடு ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாக இருந்தது, இந்நிலையில் வாசுதேவ் காட்டில் மாலை யமுனா ஆரத்தியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்று தரிசனம் செய்தார். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்