அன்னூர்; திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. அன்னூரில் இருந்து, மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கே பைரவருக்கு என தனி கோவில் உள்ளதால், பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று இரவு கோவிலில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து, பைரவருக்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.