பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று இரவு முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்க உள்ளது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் இன்று (பிப்.21.,) இரவு 8:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் திருவிழா தொடங்க உள்ளது. பழநியை சுற்றியுள்ள கிராம மக்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள். பிப்.,25,ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல் நடைபெறும். மார்ச்.4, ல் இரவு 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச்.11,ல் அம்மனுக்கு மாலை 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மார்ச்.12,ல் மாலை 4:30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடைபெறும். மார்ச்.13, இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்குதுடன் திருவிழா நிறைவு பெறும்.