திருமலை; மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிகாஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் இன்று 24ம் தேதி காலை ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள பிகாஸ் சி12 மேக்ஸ் 3.0 மின்சார ஸ்கூட்டரை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது. இது தொடர்பாக, நிறுவனத்தின் துணைத் தலைவர் துர்கேஷ் குப்தா, ஸ்ரீவாரி கோயில் முன் துணை தலைமை நிர்வாக அதிகாரி லோகநாதத்திடம் ஸ்கூட்டர் சாவியை வழங்கினார். திருமலை டிஐ சுப்பிரமணியம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.