ரெகுநாத காவிரி வரத்து கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நந்தி சிலை



கமுதி; கமுதி அருகே ரெகுநாத காவிரி வரத்து கால்வாய் தூர்வாரும் பணியின் போது பழமையான நந்தி சிலையை கண்டெடுக்கப்பட்டது.


கமுதி அருகே பாக்குவெட்டி முதல் பேரையூர் வரை செல்லும் ரெகுநாத காவிரி வரத்து கால்வாய் தூர்வாரும் பணி நடக்கிறது.அப்போது பணியின்போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த பழமையான நந்தி சிலை கிடைத்தது.இதை பேரையூரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் முனியசாமி ஆய்வு செய்தார். 


அப்போது அவர் கூறியதாவது,ரெகுநாத காவிரி வரத்து கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நந்தி சிலை 13ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து சிலையாக இருக்கலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் கிடைத்த கஜலட்சுமி சிற்பத்தை பொதுமக்கள் கழுங்கு முனியப்பசாமி கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.தற்போது கிடைத்த நந்தி சிலையையும் பொதுமக்கள் உதவியுடன் வருவாய்த்துறை அனுமதியுடன் கோயிலில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இப்பகுதியில் ஏராளமான பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்