பரமக்குடி சித்திரை திருவிழாவில் நடராஜர் வீதி உலா; மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்



பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் நடராஜர் வீதி உலா வந்தார். இங்கு ஏப்.,29 தங்க கொடிமரத்தில் நந்தி கொடியேற்றப்பட்டு, சித்திரை திருவிழா துவங்கியது. தினமும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் பல்வேறு வாகனங்களில் உலா வருகின்றனர். விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானையுடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. நேற்று காலை சிவகாமசுந்தரி, நடராஜர் வீதி வலம் வந்தனர். இன்று (மே 6) பிச்சாண்டவர் புஷ்ப சப்ரத்தில் வலம் வரும் நிலையில், நாளை (மே 7) திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மே 8ல் மாலை 6:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்