வாலாஜாபாத் கங்கையம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா



வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில், வேப்ப மரத்தடியில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டிற்கான சித்திரை மாத கூழ் வார்த்தல் விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள விநாயகர் மற்றும் கிராம தேவதை மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு குடம் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அப்போது தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். அதை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்