காரைக்கால் சோமநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



காரைக்கால்; காரைக்கால் சோமநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரைக்காலில் சோமநாயகி சமேத சோமநாத சுவாமி மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பின் அம்மையார் மணிமண்டபத்தில், சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வைதிக முறைப்படி சீர்வரிசை எடுத்து வருதல், மாலை மாற்றுதல் மாங்கல்யதாரணம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ. ,கோவில் தனி அதிகாரி காளிதாசன். திருப்பணிக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்