சுசீந்திரம் தாணுமாலையர் கோயிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்



நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.


மும்மூர்த்திகள் முலவராக அருள் பாலிக்கும் இக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று காலை 6:00 மணிக்கு இந்திரன் வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள்,பெருமாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். 10ம் திருவிழாவான நாளை இரவு 8:00 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து தெப்பக்குளத்தில் மூன்று முறை வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்