காரமடையில் திருக்கல்யாண கோலத்தில் சீதா ராமர் அருள்பாலிப்பு



கோவை; ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் 39 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி உற்சவம் காரமடையில் நடந்தது. 


கோவை மாவட்டம் காரமடை சொர்க்கவாசல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் 39 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி உற்சவம் விமர்சையாக நடந்தது.  ஸ்ரீ விஷ்வக்ஷேனர் ஆராதனம் ரக்ஷாபந்தனன் சுத்தி புன்யா வசனம் ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண ஆஞ்சநேய விக்ரக ஆராதனம், லட்சார்ச்சனை உடன் தொடங்கிய வைபவத்தில் இன்று ஸ்ரீ ராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் விவாக சுப முகூர்த்தம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை ஸ்ரீதர் பாகவதர் குழுவினர் மற்றும் ஸ்ரீ பகவான் நாம பஜனை சபா ஆகியோர் நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சாற்றுமறை மகா தீபாராதனை அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீராம நவமி உற்சவ கமிட்டியார் ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கம் செய்திருந்தனர். விழாவில் அரங்கநாத திருக்கோவில் ஸ்தலத்தார்கள், மிராசுதாரர்கள் பாகவத கோஷ்டிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்