திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் இன்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம், மே 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவர் வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று மே 6ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 8ம் தேதி தேரோட்டம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை அஹோபில மடத்தின் வீரராகவர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.