கொடைக்கானல்; கொடைக்கானலில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் அன்னை ஈஸ்வரம்மாவின் 53வது நினைவு நாள் விழா நடைபெற்றது.
கொடைக்கானலில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா அவர்களின் 53 வது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. ஏரிப்பகுதியில் அமைந்துள்ள சாய் சுருதி வளாகத்தில் காலை 6.30 மணியளவில் அம்காரம், சுப்ரபாதம் மற்றும் நாகர சங்கீர்த்தன் நிகழ்ச்சி மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 8.00 மணியளவில் வேதம் மற்றும் பஜன் நடைபெற்றது. பின்னர் மஹா நாரயண சேவா மற்றும் வஸ்திரதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் 8000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேஷ்டி, துண்டு மற்றும் சேலைகள், பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்குகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கொடைக்கானல் தாலுகா மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு (தெற்கு) ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் செய்திருந்தது.