பெயர்ச்சியடைந்தார் குருபகவான்; கோவில்களில் சிறப்பு வழிபாடு லட்சார்ச்சனை



கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி) குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.  நாளை லட்சார்ச்சனை நடக்கிறது.


கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் மதியம் ஒரு மணி 19 நிமிடத்திற்கு பிரவேசித்தார். முன்னதாக வேள்வி பூஜை நடந்தது. குரு பெயர்ச்சியை தொடர்ந்து மகா பூர்ணா குதியும் குரு பகவானுக்கு தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் தேவி பிரியா, அறங்காவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 12ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்