லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு



ரெட்டியார்சத்திரம்; ஜி.கோவில்பட்டி அருகே மங்களப்புள்ளியில், மங்களவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மூலவர், நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், ஆராதனைகள் நடந்தது.


சின்னாளபட்டி: பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில், வேணுகோபால சுவாமிக்கு பன்னீர், சந்தனம், கரும்புச் சாறு, பால், தயிர், தேன் உள்பட 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ பூஜைகள் நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்