தங்க குதிரை வாகனத்தில் கொட்டகுடி ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்



போடி; போடியில் சீனிவாசப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா.... கோவிந்தா ... என கோஷம் முழங்க இன்று கள்ளழகர் வேடத்தில் கொட்டகுடி ஆற்றில் எழுந்தருளினார்.


இந்த ஆண்டு சித்திரை மாதம் திங்கள் கிழமை சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்து உள்ளது. சந்திரனுக்கு வெண்பட்டு உகந்ததாகும். அமைதி, சுபிட்சம், மங்களகரம், அமைதி, அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் 5 அடி உயரத்தில் புதிதாக செய்யப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில், வெண் பட்டு உடுத்தி அரோகரா, கோவிந்தா ... கோபாலா ... என கோஷம் முழங்க கொட்டகுடி ஆற்றில் கால 6 : 00 மணி அளவில் எழுந்தருளினார். அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கிழக்குத் தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர் வலம் புரிந்து கோயில் வந்தடைந்தார்.


நாயுடு, நாயக்கர் மத்திய சங்க கவுரவ தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகித்தார். சீனிவாசப் பெருமாள் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாண்டி, செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா, நாயுடு நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா ... கோவிந்தா ... என்ற கோஷம் முழங்க கள்ளழகர் வேடத்தில் இருந்த சீனிவாசப் பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் நாராயணி செய்திருந்தார். பிரசாதம் வழங்கப்பட்டன.


* சித்ரா பவுர்ணமி முன்னிட்டு போடி தீர்த்த தொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்க்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரபுத்திரனாரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்