திருப்பூர் : திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று சித்ரகுப்தருக்கு கலச அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சித்ரகுப்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.