கோவை கோவில்களில் சித்திரை பௌர்ணமி சிறப்பு வழிபாடு



கோவை; சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் நிர்மலா மகளிர் கல்லூரி எதிரே அமைந்துள்ள சத்யநாராயணன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் சுவாமி. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி சத்திய நாராயணனின் அருளை பெற்றனர்.


* சித்திரை விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடைபெற்றன. இதில் மூலவர் மற்றும் வள்ளி தேவ சேனா சமேதரராக உற்சவர்சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


* சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிய்யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்