யோக காளீஸ்வரர் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா



ஸ்ரீபெரும்புதுார்; கீரநல்லுாரில் யோக காளீஸ்வரர் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அடுத்த, கீரநல்லாரில் யோக காளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நேற்று முன்தினம் இரவு அம்மன் வர்ணிப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை 9:00 மணிக்கு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், விநாயகர் கோவிலில் இருந்து அலகு குத்தி, பூ கரகம், நெருப்புச் சட்டி, பால் குடம் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வணங்கினர். ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா அன்புஜம்பால் ஸ்ரீஹரி கிருஷ்ண சுவாமிகள், கோவில் பூஜகர் தேவராஜ் சிவம், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்