திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா



உத்திரமேரூர்; கருவேப்பம்பூண்டி திரிசூலகாளியம்மன் கோவிலில் 41ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் திரிசூலகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 41ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின், 7:30 மணிக்கு உலக நன்மைக்காக யாக வேள்வியும், 8:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து, பிற்பகல் 12:30 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வும் நடந்தது.இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து, ஊர்வலமாக வந்து கோவிலில் அமைக்கப்பட்டிருந்த, தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர். இந்த தீமிதி விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்