திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபம் அருகில் உள்ள சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ஸ்வாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் ஆறாம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முன்னதாக சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பல வண்ண மலர்களாலும், அணிகலன்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவ மூர்த்திகளை மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று, தேரில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நான்கு மாட வீதிகளில் உலா வந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர் . இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் நாகபூஷ்ணம், கோயில் ஆய்வாளர் சுதர்சன், பணியாளர்கள், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.