சின்னமனூர்; சின்னமனுாரில் பிரம்ம குமாரிகள் ஈஷ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் கோடி லிங்க தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை வர்த்தக சங்க தலைவர் உதயகுமார் துவக்கி வைத்தார். வடக்கு ரதவீதி மகாலில் அமைப்பின் சார்பில் இலவச தியான பயிற்சி மற்றும் கோடி லிங்க தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இங்குள்ள ராஜ யோக தியான நிலையத்தில் ஒரு வாரம் இலவச தியான பயிற்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோடி லிங்கத்தை எராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை ( ஞாயிறு ) வரை கோடி லிங்க தரிசனம் செய்யலாம் . ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் செய்துள்ளார்.