பிரம்மதேசம் கோவில் ஓவியங்கள் அழிப்பு



திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான, இந்த கோவிலின் சுற்றுச்சுவர்களில், மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.


கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், திருப்பணிக்காக தண்ணீரை பீய்ச்சியடித் து, சுவரை சுத்தப்படுத்தினர். இதில், பழமையான ஓவியங்கள் அழிந்தன. இதையடுத்து, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . பின், சுவர் ஓவியங்கள் அழிக்கும் பணி, நேற்று நிறுத்தப்பட்டது.


இதுகுறித்து கவிதா பிரியதர்ஷினி கூறுகையில், ‘‘மூலிகை ஓவியங்களின் தன்மை மாறாது, புதுப்பித்து, பேணி பாதுகாக்கப்படும்,’’ என்றார். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்