மயிலாடுதுறை மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்



மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் பழமையான மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை டவுன் 2ம் நம்பர் புதுத்தெருவில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகா காளி அம்மனை ஆயிரக்கணக்கானோர் குலதெய்வமாக போற்றி வழிபட்டு வருகின்றனர்.  இக்கோயில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பழமை மாறாது தரைத்தளம் கருங்கல் திருப்பலி செய்யப்பட்டு    கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து கோவில் சன்னதி விமானத்தை அடைந்து மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் வார்த்து, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜ்குமார் தலைமையிலான கோவில் நிர்வாகிகள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர் தொடர்ந்து மாலை அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்