கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில் காஞ்சி மடாதிபதி தரிசனம்



காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று கோவிந்தவாடியில் தட்சிணாமூர்த்தி கோவில் குரு பூஜை செய்து, அருளாசி வழங்கினார்.


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளையமடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் விஜய யாத்திரையாக கடந்த மே மாதம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, சாதுர்மாஸ்ய விரதம் கடை பிடித்து வந்தனர். இந்த விரதம் முடித்து விட்டு, நேற்று காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் இருக்கும், அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் குரு கோவில் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு வந்தார். அவருக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில் செயல் அலுவலர் கதிரவன் மற்றும் சோமு குருக்களுடன் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கருவறைக்கு சென்று பூஜை செய்து, தட்சிணாமூர்த்தியை வழிபட்டார். அதைத் தொடர்ந்து, பரிவார மூர்த்திகளை தரிசனம் செய்தார். தல விருட்சம் கல்லால மரத்தை பார்வையிட்டார். இதையடுத்து, உத்சவ மண்டபத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்