கரிய மாணிக்க பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்



களக்காட்டூர்; பராமரிப்பின்றி கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்து உள்ள களக்காட்டூர் கரிய மாணிக்க பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில், கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வன போஜன உத்சவத்தின்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இக்கோவிலில் எழுந்தருள்வார். முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கோவில் சுவரில் விரிசல் ஏற்பட்டும், கோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: களக்கா ட்டூர் கரிய மாணிக்க பெருமாள் கோவிலை புனரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு கோவிலில் திருப்பணி துவக்கப்படும். இவ்வாறு கூறினார்


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்