முப்புடாதி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றம்



சேத்துார்; சேத்துார் அடுத்த சொக்கநாதன் புத்துார் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன், நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில்களில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. முப்புடாதி அம்மன் கோயிலில் முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிக்கு பின் கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். அக். 10ல் பூக்குழி விழா நடக்கும் மாரியம்மன் கோயில் பொங்கலை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பல்வேறு வகையான அபிஷேகங்கள் முடிந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், திருவாசகம் சிவபுராணம் பாடல் உள்ளிட்டவை நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக அக். 10 தேரோட்டம் நடக்கும். ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்